தங்கையைக் காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரம்... மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணி!
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், தனது தங்கையை மைத்துனர் காதலித்து வந்த நிலையில், தங்கையை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைக் காதலித்ததால் ஆத்திரம் தீராமல், தங்கையுடனான காதல் உறவை கைவிட்டு ஏமாற்றிய மைத்துனரைப் பழிவாங்கி நினைத்த அண்ணி, அவரைக் கொடூரமாகத் தாக்கி, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ் அருகே மௌயிமா பகுதியில் உள்ள மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் அசோரே என்பவருக்கு உதய் மற்றும் உமேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் உமேஷ் (20) கடந்த 16ம் தேதி இரவு தனது அறையில் படுத்திருந்த போது, அடையாளம் தெரியாதவர் தாக்கியதில் கடுமையான காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர் அலறியடித்தப்படி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்தபோது, உதயின் மனைவியான மஞ்சு சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடந்த விசாரணையில், உமேஷ் முன்பு மஞ்சுவின் தங்கையுடன் காதல் உறவில் இருந்து வந்ததும், பின்னர் மஞ்சுவின் தங்கையை ஏமாற்றிவிட்டு, வேறொஇரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து மஞ்சுவின் தங்கை மன உளைச்சலுக்கு உள்ளானதும் தெரியவந்தது.
தங்கையின் மன வலி காரணமாக கோபமடைந்த மஞ்சு, பழிவாங்கும் நோக்கில் 16ம் தேதி நள்ளிரவில் கத்தியை எடுத்துக்கொண்டு உமேஷின் அறைக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை தாக்கி, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் நடக்கும்போது உமேஷ் வேதனையால் அலறியபோது குடும்பத்தினர் ஓடி சென்றனர். ஆனால் மஞ்சு அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.

உமேஷுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். தற்போது நிலைமை சீராக இருக்கும் என்றும் முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மஞ்சுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
