வீட்டு வாடகை கொடுக்காததால் ஆத்திரம்.. நபரை வெட்டிக் கொன்ற உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!
தேனி மாவட்டம், சமதர்மபுரத்தில், முத்துக்குமரன் என்பவரது வீட்டில் பெருமாள் (42) வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வீட்டில் வசிக்கும் பெருமாளிடம் முத்துக்குமரன் வீட்டு வாடகை கேட்டுள்ளார். அப்போது, பெருமாள், இரண்டு நாட்களில் தருவதாக கூறியதால், குடிபோதையில் இருந்த வீட்டின் உரிமையாளர் முத்துக்குமரன், ‘‘வீட்டு வாடகையை கட்ட முடியாத நிலையில், ஏன் உயிருடன் இருக்கிறாய்? என எதகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முத்துக்குமரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெருமாளின் தலை, கை, கால் என உடலின் பல்வேறு பகுதிகளில் தாக்கியதாகவும், பெருமாள் பலத்த காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் குறித்து தேனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பெருமாளைத் தாக்கிய முத்துக்குமரனைக் கைது செய்து, வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 26) வழக்கு விசாரணை முடிந்து முத்துக்குமரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, கொலை நோக்குடன் கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக முத்துக்குமரனுக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் தேனி கூடுதல் தலைமை நீதிபதி எஸ்.கோபிநாதன் விதித்தார். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முத்துக்குமரனை கோர்ட்டில் இருந்து போலீசார் தங்கள் வாகனத்தில் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!