திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்.. பெண்ணைக் கொன்று 8 மாதங்களாக ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஒரு படிதார், 2023 ஆம் ஆண்டு வாடகைக்கு தீரேந்திர ஸ்ரீவஸ்தவாவின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.இதற்கிடையில், கடந்த ஆண்டு படிதார் வீட்டை காலி செய்து, தனது உடைமைகளை மட்டும் அறையில் விட்டுச் சென்றார். இந்த நிலையில், படிதாரின் உடைமைகள் வீட்டில் இருந்ததால், கடந்த 8 ஆம் தேதி, வீட்டில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மீண்டும் பூட்டினார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வீட்டின் உரிமையாளர் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா மூலம் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை போலீசார் திறந்தனர். அதில், நகைகள் அணிந்து, கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக வீட்டில் வசித்து வந்த படிதாரை கைது செய்தனர். அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
விசாரணையில், படிதாருக்கும் பிங்கி பிரஜாபதி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், தனது நண்பரின் உதவியுடன் படிதாரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பிறகு, பிங்கி பிரஜாபதியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்தப் பெண்ணின் உடல் சுமார் 8 மாதங்களாக குளிர்சாதன பெட்டியில் இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பிங்கி பிரஜாபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!