கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் ஆத்திரம்.. கணவனை பிளான் பண்ணி கொன்ற மனைவி!

 
கொலை

திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள குருவிகுளம் வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே 2 மதுபாட்டில்கள் கிடந்ததால் அவரை யாராவது கொன்றார்களா என போலீசார் விசாரணை நடத்தினர். அல்லது குடிபோதையில் கீழே விழுந்து  உயிரிழந்தாரா என விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் எரியோடு அருகே உள்ள காளாணம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து (54) என்பது தெரியவந்தது. மேலும், கூலித் தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற 45 வயது மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மாங்கரை நடுப்பட்டியை சேர்ந்த கிருபாகரனுக்கும், நாச்சிமுத்து மனைவி காளியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் நாச்சிமுத்துவுக்கு இவர்களது உறவு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நாச்சிமுத்து, மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி இருவரும் கள்ளக்கடலில் இருந்து வந்தனர். கள்ளக்காதலுடன்  உல்லாசமாக இருக்க முடியாததால் மனமுடைந்த காளியம்மாள், கணவனை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்க்க நாச்சிமுத்து, காளியம்மாள் ஆகியோர் சென்றனர். இத்தகவலை காளியம்மாள் கிருபாகரனிடம் தெரிவித்தார்.

கைது

இதையடுத்து நாச்சிமுத்து இருவரும் சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறி கிருபாகரனை மாமுகோவிலூர் பிரிவு அருகே உள்ள குருவிகுளம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். நாச்சிமுத்து போதையில் இருந்தபோது, ​​மறைத்து வைத்திருந்த கட்டையால் நாச்சிமுத்துவை தலையில் தாக்கி கொன்று விட்டு கிருபாகரன் தப்பியோடினார். நாச்சிமுத்துவின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web