வாயை மூட சொன்னதால் ஆத்திரம்.. மனைவியின் வாயை கடித்து குதறிய கணவன்.. 16 தையல்கள் போட்ட கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நாக்லா பூச்சானில் விஷ்ணு என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் வழக்கம் போல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது, கோபமாக வீட்டிற்கு வந்த விஷ்ணு, காரணமின்றி தனது மனைவியுடன் சண்டையிட்டார். இதனால் எரிச்சலடைந்த அவரது மனைவி, விஷ்ணுவை சிறிது நேரம் அமைதியாக இருக்கச் சொன்னார்.
இதனால் கோபமடைந்த விஷ்ணு, "நான் வாயை மூட வேண்டுமா? இந்த வாய் இருந்தால் தானே, நீ என்ன எதிர்த்துப் பேசுவ" என்று கூறி அவர் தனது மனைவியின் வாயைக் கடித்தார். தடுக்க முயன்ற தனது மனைவியின் சகோதரியையும் கடுமையாகத் தாக்கினார். இதன் காரணமாக, அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது மாமியார் மற்றும் மைத்துனரிடம் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து கூறினார். ஆனால் இருவரும் மீண்டும் அந்தப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்தனர். இதை அறிந்ததும், பெண்ணின் தந்தை தனது மகளை மகுரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
நடந்த சம்பவத்தை முழுவதுமாக போலீசிடம் சொல்ல முடியாத அந்தப் பெண், அதை காகிதத்தில் எழுதி காட்டினார். தனது கணவர், மைத்துனர் மற்றும் மாமியார் மீது துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!