பாட்டியை திட்டியதால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டுக்காரரை சரமாரியாக குத்திக்கொன்ற பேரன் கைது!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் சிவா (29). கூலித் தொழிலாளியான இவர் திருமணமானவர். ஆனால் அவரது குடும்பம் மும்பையில் வசிக்கிறது, அவர் மட்டும் வீரரெட்டிக்குப்பம் கிராமத்தில் வசிக்கிறார்.
இந்நிலையில் சிவா குடிபோதையில் பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தன் மனைவி செல்லம்மாள் (60) என்ற மூதாட்டியை திட்டினார். அப்போது அங்கு வந்த செல்லம்மாளின் பேரன் அபிமன்யு (19) சிவாவை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அபிமன்யு சிவாவை கத்தியால் பலமுறை குத்தினார். இதில், பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஆலடி போலீசார், சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் அபிமன்யுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!