திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்.. மகளை கொடூரமாக கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற பெற்றோர்கள்!

 
டிம்பர்லைன் சிறுமி

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் "கௌரவக் கொலை" முயற்சி நடந்துள்ளது. 17 வயது சிறுமியின் தாய் சஹ்ரா சூஃபி மொஹ்சின் அலி மற்றும் அவரது தந்தை, இஹ்சான் அலி. இவர்கள் இருவரும் தங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிராகரித்ததற்காக, தங்கள் 17 வயது மகளை கழுத்தை நெரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.


சிறுமியை ஈராக்கிற்கு விமானத்தில் அழைத்துச் செல்ல பெற்றோர் முயற்சித்ததை அடுத்து சிறுமி பள்ளிக்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, பள்ளிக்கு வந்த சிறுமியின் தந்தை, சிறுமியை கழுத்தை நெரித்து, கொல்ல முயன்றார். சக மாணவர்களின் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது இஹ்சான் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் தாயார் சஹ்ரா கனடா எல்லையில் பிடிபட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web