ரூ.17,000 கோடி மோசடி வழக்கு... அனில் அம்பானி உதவியாளர் கைது!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் குழும நிறுவனங்களுக்கு 'யெஸ் வங்கி' ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. இந்த கடனை தவறான முறையில் மற்ற துணை நிறுவனங்களுக்கு மாற்றியதன் மூலம், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் ரூ.17,000 கோடி மதிப்பிலான மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, அமலாக்கத்துறை (ED) சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அனில் அம்பானியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
வழக்கின் அடுத்த கட்டமாக, இன்று அனில் அம்பானியின் நெருங்கிய உதவியாளர் மற்றும் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குநர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
