மாணவர்கள் அதிர்ச்சி... அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50% உயர்வு!

 
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் அண்ணா பல்கலைகத்தின்  கீழ் செயல்பட்டு வரும் அனைத்து  பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கழகம்

மேலும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்ந்துள்ளது.  இந்த புதிய கட்டணம்  நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்து  உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, ” பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்

இந்த முறை நடப்பாண்டும், அடுத்த ஆண்டும் உயர்த்தப்படாது.  சிண்டிகேட் மீண்டும் கூடி முடிவெடுக்கும் வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயராது. அதுவரை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தற்போதைய கட்டண முறையே நடைமுறையில் இருக்கும் “எனத்  உறுதி அளித்துள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web