அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. திமுக அரசுக்கு எதிராக பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்!

 
அன்பரசன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதில் இருந்து, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் நாளுக்கு நாள் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தும், கண்டனங்கள் தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் அன்பரசன், திமுகவுக்கு எதிராக  அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் முகநூல் பக்கத்தில்கருத்து பதிவிட்டுள்ளார்.  இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீசார் காவலர் அன்பரசனிடம் விசாரணை நடத்தினர். கருத்து பதிவிடப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், அன்பரசனை உடனடியாக பணியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவு நீக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று (டிச.31) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சஸ்பெண்ட்

பின்னர், போராட்ட இடத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தவெக உறுப்பினர்கள் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை சந்திக்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டார். அவர்களை போலீசார் விடுவித்து சில மணி நேரம் கழித்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web