3வது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் அன்னபூரணி அம்மா.. வியப்பில் பக்தகோடிகள்!
அன்னபூரணி அரசு அம்மா.. இந்த பெயரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. முதல் திருமணத்தை கைவிட்ட அன்னபூரணி, ஆன்மிக கூட்டணியாக அரசு என்பவருடன் திருமணம் செய்து அதன் பின் ஆன்மீக பணியில் மும்முரமாக ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக, அரசு இறந்தபோது, அன்னபூரணி அவர் விட்டுச் சென்ற ஆன்மீகப் பணியில் ஆர்வம் காட்டினார். அதை வளர்க்க விரும்பி, செங்கல்பட்டில் பெரிய ஆசிரமம் தொடங்கினார்.
அதன்பிறகு, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த அன்னபூரணி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைக் கடந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புலம் பெயர்ந்தவர், அங்கேயே ஆசிரமத்தை கோவிலாக நிறுவி, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் அன்னபூரணி நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரோஹித்தை திருமணம் செய்தததாகவும், அதுவும் நேற்று அக்டோபர் 28ம் தேதி இரண்டாவது திருமணம் நாளில் நடந்ததாகவும் கூறினார்.
ரோஹித் வேறு யாருமல்ல, அன்னபூரணியையும், அவளுடைய கோயிலையும் நிர்வகித்து வந்தவர் தான். அன்னபூரணி அரசு அம்மா பிரச்சினையில் சிக்கிய போதெல்லாம், ரோஹித் தான் அதிகம் அடிபடும் பெயர். அவரை மணந்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி கொடுத்திருக்கும் அன்னபூரணி, உலக மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எனது அருளைப் பெற்றுத் தருவதாக அறிவித்துள்ளார். அன்னபூரணி தனது பக்தர்களுக்கு விடுத்த அறிவிப்பு இதோ..
'எனது பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பு... 2024 நவம்பர் 28 அன்று, அரசுவின் மற்றொரு அத்தியாயம் தொடங்கும். அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பமாகிறது என்று அர்த்தம். நான் ஒரு அமானுஷ்ய சக்தியால் உந்தப்பட்டாலும், சமூகத்தின் பார்வையில் என்னைப் பெண்ணாகக் கருதும் சமூகத்திலிருந்து எந்த இடையூறும் இல்லாமல் எனது ஆன்மீக சேவையைச் செய்ய நான் சுதந்திரமாக இருக்கிறேன். திருமணமான அதே நவம்பர் 28 ஆம் தேதி, எனது ஆன்மீகத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ள ரோஹித்தை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.
அன்றைய தினம் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்ச்சியில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆசி பெறலாம். என்னைத் தேடி வரும் அனைத்து மக்களுக்கும், அளவற்ற ஆற்றலுடனும், அளவற்ற கருணையுடனும், உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து, நீங்கள் கேட்பதை எல்லாம் வழங்கி, உங்களை குடும்பத்துடன் கொண்டாட வைக்கும் உங்கள் அன்பான அம்மா. மக்களுக்கு ஆசி வழங்கும் சேவையாக செய்து வருகிறேன். இனிமேல் என் உடல் இந்த பூமியில் இருக்கும் வரை நான் சேவை செய்வேன். உண்மையை மட்டுமே கடைபிடிப்பேன் என்றும், உண்மை என்னை வழிநடத்தும் வழியில் செயல்படுவேன் என்றும் அன்னபூரணி அரசு அம்மா அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!