செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு... தமிழகத்தில் எத்தனை நாட்கள் தெரியுமா?!

 
வங்கி
செப்டம்பர் மாதம் துவங்கிடுச்சு. மாதத்தின் முதல் நாளே வங்கி விடுமுறையில் துவங்கி இருக்கும் நிலையில், இந்த மாதத்தில் இன்னும் எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளுங்க. கடைசி நேர பரபரப்புக்கு ஆளாகாதீங்க. இந்த செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளும் வருவதால், பண பரிவர்த்தனைகளை முறையாக திட்டமிட்டுக் கொள்ளுங்க.

வங்கி விடுமுறை
இப்படி முக்கிய காரியங்களை செய்வதற்காக வங்கிகளுக்கு செல்லும்பொழுது வங்கி விடுமுறையாக இருந்தால் அந்த நாளே வீணாகிவிடும். மீண்டும் ஒரு நாள் வங்கி செல்வதற்காக விடுப்பு எடுக்க வேண்டிவரும். இதனை தவிர்க்க இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் விடுமுறை பட்டியல் ஒரு மாதம் முன்பாக வெளியிடப்படுகிறது.

இந்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 2024ம் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் வங்கிப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  செப்டம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப வேறுபடும். உங்க மாநிலத்தில் எப்போது விடுமுறை என்பதை செக் பண்ணிக்கோங்க.

செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியலில் நேற்று  மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையுடன் துவங்கியிருக்கிறது. 

செப்டம்பர் 1 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 7 - சனிக்கிழமை - விநாயக சதுர்த்தி  
செப்டம்பர் 8 - ஞாயிற்றுக்கிழமை  
செப்டம்பர் 13 - வெள்ளிக்கிழமை ராம்தேவ் ஜெயந்தி , தேஜா தஷ்மி ராஜஸ்தான்
செப்டம்பர் 14 - 2 வது சனிக்கிழமை
செப்டம்பர் 15- ஞாயிற்றுக்கிழமை 

வங்கி விடுமுறை

செப்டம்பர் 16- திங்கட்கிழமை -ஈத் இ மிலாத் விஸ்வகர்மா பூஜை ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப்
செப்டம்பர் 17- செவ்வாய் கிழமை இந்திர ஜாத்ரா சிக்கிம்
செப்டம்பர் 18 - புதன்கிழமை ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி, கேரளா
செப்டம்பர் 21- சனிக்கிழமை ஸ்ரீ நாராயண குரு சமாதி, கேரளா
செப்டம்பர் 22 - ஞாயிற்றுக்கிழமை 
செப்டம்பர் 23 - திங்கட்கிழமை -ஹரியானா மாவீரர் தியாக தினம் ஹரியானா
செப்டம்பர் 28 -4 வது சனிக்கிழமை
செப்டம்பர் 29 -ஞாயிற்றுக்கிழமை  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web