தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு!

 
ஜனாதிபதி விருது

தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி

இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவலர்களுக்கு 746 விருதுகளும், பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல் ஆய்வாளர்கள் துரைகுமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கு, காவல்துறையில் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான ஜனாதிபதியின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி

காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், இணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூடுதல் ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர் பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web