கச்சத்தீவில் அந்தோணியாா் திருவிழா... 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்!

 
கச்சத்தீவு
 கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா- இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவில், ஒவ்வொரு வருடமும் புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் பக்தா்கள் செல்வது வழக்கம். 

கச்சத்தீவு அந்தோணியார்

இந்த ஆண்டு வரும் மாா்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறும் இந்த ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க வருமாறு இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா், சிவகங்கை மாவட்ட ஆயருக்கு அழைப்பிழ் அனுப்பினாா். இதையடுத்து, திருவிழாவில் இங்கிருந்து செல்லும் பக்தா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமேசுவரம் வோ்க்கோடு பங்குத்தந்தை அசோக்வினோ தலைமை நடைபெற்றது. இதில், அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, என்.ஜே. போஸ், எம்.எஸ். அருள், எமரிட், சகாயம், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன், சின்னத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், 91 படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி விழா நிா்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web