டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ... தொழில்நுட்ப சேவை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 வெளியிட்ட 2024ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 2 தாள்கள் கொண்ட தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் முதல் தாளில் தமிழ் தகுதி தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு நவம்பர் 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
இதற்கான பொது அறிவு தாள் தேர்வு கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு இரண்டும் பொதுவாக ஒரு நாளிலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்களுக்கான தேர்வு தனித்தனியாகவும் நடத்தப்படும்.
இதனிடையே ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த 12,19, 20, 21-ம் தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்பான விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான (www.tnpsc.gov.in, www.tnpscexams.in ) மூலம் தெரிந்து கொள்ளலாம்.