ப்ளீஸ்... டெல்லியில் செயற்கை மழைக்கு ஒப்புதல் கொடுங்க... சுற்றுச்சூழல் அமைச்சர் மத்திய அரசுக்கு அவசர கடிதம்!
தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில், செயற்கை மழை பெய்ய வைத்து காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம் என வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடிதம் எழுதியுள்ளது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. டெல்லியை பொறுத்தவரை குளிர் கால தொடக்கத்தில் வழக்கமாக மழை பெய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மழை பெய்யும் போது காற்று மாசு சற்று குறையலாம். இதனால் டெல்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். நடப்பாண்டை பொறுத்தவரை இதுவரை மழை பெய்யாததால் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
Delhi is officially the most polluted city in the world, 4x Hazardous levels and nearly five times as bad as the second most polluted city, Dhaka. It is unconscionable that our government has been witnessing this nightmare for years and does nothing about it. I have run an Air… pic.twitter.com/sLZhfeo722
— Shashi Tharoor (@ShashiTharoor) November 18, 2024
பனிப்பொழிவுக்கு இடையே காற்றின் மாசுவும் அதிகரித்து இருப்பதால் புகை மூட்டம் போல காற்று மாசு நிலவுகிறது. டெல்லியில் இன்று காலை காற்றில் மாசுபாடு அளவை குறிக்கும் தரக்குறியீடு 471 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. காற்று மாசு காரணமாக குறைந்த அளவே கண்ணுக்கு புலப்படுவதால், ரயில் விமன போக்குவரத்து சேவையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் வாகன ஒட்டிகளும் கடும் சிரமப்பட்டே வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு என அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் காற்று மாசுவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகனங்களை அனுமதிப்பது, வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காற்றின் மாசு அபாய கட்டத்தில் உள்ள நிலையில், செயற்கை மழையை பெய்ய வைப்பது தான் தீர்வாக இருக்கும் என டெல்லி அரசு கூறியுள்ளது.
இது குறித்து அனுமதி அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் கோபாய் ராய் , "வட இந்தியாவில் புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இந்த புகையில் இருந்து விடுபட செயற்கை மழை மட்டுமே ஒரே தீர்வு. இது மருத்துவ அவசர சுகாதார நிலை. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் தார்மீக பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!