உலகின் அற்புத மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்... மனைவி சாய்ரா பானு உருக்கம்!
ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் இது குறித்து வதந்தி பரப்ப தொடங்கினர். இந்த வீடியோக்களை நீக்கவில்லை எனில் வழக்கு தொடர்வேன் என ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் “உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரைபோல ஒரு அற்புதமான மனிதரை பார்க்க முடியாது. கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது. எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்
எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன். தயவு செய்து அவர் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள்” என அதில் பேசியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!