10, +2 தேர்வு முடிந்து சம்மர்ல திருப்பதி போறீங்களா? மே மாத தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது!

 
திருப்பதி

10வது மற்றும் +2 பொதுத்தேர்வுகள் முடிந்து வரும் மே மாத விடுமுறை தினங்களில் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கீங்களா? மே மாத தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.

தினந்தோறும் உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய குவிகின்றனர்.

திருப்பதி

திருப்பதி திருமலைக்கு செல்ல இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் இவைகளை எல்லாம் தாண்டி ரூ 300 சிறப்பு தரிசனமும் இருக்கிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் உள்ளது.

அந்த வகையில் தற்போது மே மாதம் திருப்பதிக்குச் செல்ல நேற்று காலை துவங்கியது. ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படுகின்ற நிலையில், மே மாதத்திற்கான தரிசனத்திற்கு இப்போதே முன்பதிவு செய்துடுங்க. விடுமுறை தினங்கள் என்பதால் நாடு முழுவதும் இருந்தும் தேர்வுகள் முடிந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

திருமலை தேவஸ்தானத்தின் இணையதள முகவரியில் யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம். அது போல் போனிலும் திருப்பதி தேவஸ்தான செயலியை டவுன்லோடு செய்துக் கொண்டு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய 12 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையின் எண் ஆகியவை தேவைப்படும். இவற்றுடன் தயாராக இருந்து 10 மணிக்கு லாகின் செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிலேயே கூடுதல் லட்டுக்கு பணத்தையும் செலுத்திக் கொள்ளலாம்.

அது போல் மாலை 3 மணிக்கு அறைகளுக்கான முன்பதிவு நடைபெறும். ரூ 100 கட்டணத்தில் அறைகள் 24 மணி நேரத்திற்கு தங்கும் வகையில் இருக்கும். இதற்காக டெபாசிட் தொகையாக ரூ 500 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web