ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவாக மனைவி பொற்கொடி மனு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை ஆதரித்து அவரது மனைவி பொற்கொடி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னை வடபகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு ஆம்ஸ்ட்ராங் குடும்பம் கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி விசாரணையை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து கடந்த மாதம் 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராஙின் மனைவி பொற்கொடி சார்பில் வக்கீல் ராகுல் ஷியாம் பன்டாரி தாக்கல் செய்த மனுவில், “கரூர் கூட்டநெரிசல் வழக்கில் வழங்கப்பட்டதுபோல், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணையும் உயர்நீதிமன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். மேலும், வழக்கில் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற வளாகத் தரப்புகள் தெரிவித்தன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
