ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிக்கு திடீர் நெஞ்சுவலி... ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிக்கு திடீர் நெஞ்சுவலி... ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி, திடீர் நெஞ்சுலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். அதில், திருவேங்கடம் என்பவர், விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றதாக போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 

ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு உளவாளியாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் திருமலை கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில், இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, சிறைக்காவலர்கள் திருமலையை உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web