திலக வரவேற்பால் சர்ச்சையில் ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி!

 
ராணுவம்
 

இந்திய ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவுக்கு விமானப்படை விமானத்தில் வந்தபோது, அவருக்கு ஹிந்து மரபுப்படி திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ராணுவ அதிகாரி ஒருவர் சீருடையுடன் மதச் சின்னங்களை ஏற்றுக்கொள்வது விதிமுறைக்கு முரணாக இருப்பதாகக் கூறி சர்ச்சை கிளம்பியுள்ளது.

ராணுவ விதிகளின்படி, சீருடையில் இருக்கும் அதிகாரிகள் எந்தவித மதச் சின்னங்களையும் அணியவோ, திலகமிடவோ, விபூதி பூசவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது மதச்சார்பற்ற தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதாகும். அதேசமயம், சிலர் இது ஒரு வழக்கமான வரவேற்பு முறை மட்டுமே என்றும், அதில் மத அடையாள நோக்கம் காண வேண்டாம் என்றும் வாதிடுகின்றனர்.

இதேவேளை, சிலர் விதிகள் அனைவருக்கும் ஒன்றாகவே பொருந்த வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் உபேந்திர துவிவேதி ராணுவ சீருடையில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராசாரியாவை சந்தித்து ஆசி பெற்றது விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, குரு தட்சிணையாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ராணுவத் தலைமை தளபதி ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!