அடுத்தடுத்து சோகம்... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்... 2 வீரர்கள் பலி... 3 பேர் கவலைக்கிடம்!

 
ராணுவ வாகனம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பந்திப்போரா மாவட்டம் உலர் வியூபாயிண்ட் அருகே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ  வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

ராணுவ வாகனம்

இந்த கோர விபத்தில்  5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவ வாகனம்

 இவர்களுடன் விபத்தில் சிக்கிய 3 பேரின் உடல் நிலையும் மிக மோசமாக இருப்பதாகவும் தற்போது ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும்  பந்திபோரா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மஸ்ரத் இஃபால் கூறினார்.இதே போன்று ஏற்கனவே முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை  ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web