திருச்செந்தூரில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் தரிசனை செய்ய ஏற்பாடு... காவல்துறை அறிவிப்பு

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி திருவிழா கடந்த 02.11.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

கடந்த 02.11.2024 அன்று கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர். 2 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

திருச்செந்தூர்

மேலும் 07.11.2024 அன்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்கள் வசதிக்காக 18 இடங்களில் மொத்தம் சுமார் 20,000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டும், 

பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 4 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டும், 4 இடங்களில் அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNSDRF) தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 

மேலும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பொதுமக்களோடு மக்களாக கலந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குறிபிட்ட எல்லையில் கயிறு கட்டியும், ரோந்து படகுகள் மூலம் காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபடுவர். 

திருச்செந்தூர்

கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பெரிய திரை அமைப்பு நிறுவப்பட்டு சூரசம்ஹார நிகழ்வை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்தும், கோயிலை சுற்றி தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் நிர்வாக விடுதி அறைகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆகவே பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்யவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web