பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்!

பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக, தவறான முறையில் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்கான வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கேரள மருத்துவ ஆய்வாளர், பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்ய பார்மசிக்கு எதிராக தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் விளம்பர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்ற வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராக தவறியதையடுத்து, கேரள பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திவ்யா பார்மசியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாலகிருஷ்ணன் மற்றும் மூன்றாவதாக ராம்தேவின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!