பதவி விலகிய அதிபருக்கு எதிராக கைது வாரண்ட்.. பெரும் பதற்றத்தில் தென்கொரியா!
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், டிசம்பர் 3 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், அவர் தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார், இது அரசாங்கத்திற்கு எதிரான சதிகளை அகற்றுவதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து நாட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. எனினும், இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு விரைந்தனர். அப்போது, ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர். இதற்கிடையில் ராணுவ சட்டம் 6 மணி நேரத்தில் நீக்கப்பட்டது.
இதையடுத்து, தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல், அதிபர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "யுன் சுக்-யோல் கடந்த மார்ச் மாதம் ராணுவ அதிகாரிகளுடன் ராணுவச் சட்ட அறிவிப்பு குறித்து விவாதித்ததற்கான ஆதாரம் உள்ளது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராணுவ வீரர்களுக்கு தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரம் அளித்தார்.
இதனால் தென் கொரியாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இடைக்கால அதிபராக நிதியமைச்சர் சோய் சாங்-மோக் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், யூன் சுக் யோல் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கூட்டுப் புலனாய்வுத் தலைமையகம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் யூன் சுக் யோல் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தென்கொரிய நீதிமன்றம், யூன் சுக் யோலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!