ஏமன் மீது அடுத்தடுத்து தாக்குதல்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி!
காசாவில் செயல்பட்டு வரும் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த போரில் ஹமாஸ் போராளிக் குழுவுக்கு ஆதரவாக உள்ளனர்.
மேலும், ஹமாஸ் போராளிக் குழுவுக்கு ஆதரவு என்ற பெயரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் உள்ள அல்-ஹுதைதா மாகாணம், அத்-துஹயாடா மாவட்டத்தில் உள்ள அல்-பாஷா பகுதியில் நேற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!