இந்திய விஞ்ஞானி மீது ஈர்ப்பு.. தனது மகனுக்கு சந்திரசேகர் என பெயர் சூட்டிய எலான் மஸ்க்..!!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயரிட்டுள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இங்கிலாந்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கோடீஸ்வர தொழிலதிபரும், டெஸ்லா உரிமையாளருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.
Look who i bumped into at #AISafetySummit at Bletchley Park, UK.@elonmusk shared that his son with @shivon has a middle name "Chandrasekhar" - named after 1983 Nobel physicist Prof S Chandrasekhar pic.twitter.com/S8v0rUcl8P
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) November 2, 2023
சந்திப்புக்குப் பிறகு, அமைச்சர் சந்திரசேகர் தனக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே நடந்த உரையாடல் என்ன என்பதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், எலான் மஸ்க்கின் மகனின் முழுப் பெயர் ஷிவோன் சந்திரசேகர் ஜிலிஸ் என்று அமைச்சர் கூறினார். எலான் மஸ்க் இந்திய விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் எஸ் சந்திரசேகரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
எனவே அவர் தனது மகனின் பெயரின் நடுவில் சந்திரசேகர் என்ற பெயரை வைத்துள்ளார். இதனை மஸ்க்கே கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானி சந்திரசேகர் 1983 இல் நோபல் பரிசு பெற்றார்.