ஆனந்தத்தை அள்ளித் தரும் ஆடி மாத அம்பிகை வழிபாடு!

 
ஆனந்தத்தை அள்ளித் தரும் ஆடி மாத அம்பிகை வழிபாடு!


ஆடி மாதம் அம்பிகை மாதம். ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி . இந்த மாதத்தில் சிவனின் அருளும் அம்பிகையுடன் இணைவதாக ஐதிகம். இதனால் ஆடிமாதம் தனிப்பெருமை வாய்ந்தவை.
அனைத்து அம்மன் கோவில்கள், சிவாலயங்களில் உள்ள அம்பிகை சன்னதிகள் அனைத்திலும் அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.அதிலும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அந்த திருக்காட்சியை தரிசனம் செய்பவர்களுக்கு, கோடி இன்பங்கள் தேடி வரும் என்பது ஐதிகம்.

ஆனந்தத்தை அள்ளித் தரும் ஆடி மாத அம்பிகை வழிபாடு!


‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ என்ற நம் ஆன்றோர்களின் வாக்கு இப்படி வந்தது தான். ஆடி வெள்ளியில் அம்பாளை வழிபடுவதைப் போலவே, விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை வழிபாடு செய்வார்கள். இதனால் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
ஆடி மாதம் தேவா்களுக்கு இரவு நேரம். ஆடி மாதத்தின் எல்லா தினங்களிலும் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி அம்பாளை வழிபாடு செய்து வந்தால் குடும்ப முன்னேற்றம், மாங்கல்ய பாக்கியம், தொழில் மேன்மை என அனைத்து வளங்களும் வந்து சேரும்.

ஆனந்தத்தை அள்ளித் தரும் ஆடி மாத அம்பிகை வழிபாடு!

ஆடிமாதத்தில் பெண்கள் பலரும் வீடுகளில் குத்துவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். இல்லங்களில் இந்த பூஜையை நடத்தி அதில் சுமங்கலிகளுக்கு, ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் இல்லத்தின் இன்பம் குடிகொள்ளும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை .

From around the web