மியான்மர்: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

 
மியான்மர்: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

மியான்மர் நாட்டின் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

மியான்மர் நாட்டின் அரசு அதிகாரத்தை சமீபத்தில் ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனையடுத்து ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியை ராணுவத்தினர் கைது செய்தனர். அதன்பின் அவர் மீது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, தேசவிரோதமாக பேசியது, ஊழல் குற்றச்சாட்டுகள், தேர்தல் பிரச்சாரத்திற்காக சட்ட விரோதமாக வாக்கி டாக்கிகளை பயன்படுத்தியது என 4 குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஆங் சான் சூகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் வின் மைண்ட்டுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

மியான்மரில் 1962 முதல் 50 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஆங் சான் சூகி ஜனநாயக கட்சியை ஆரம்பித்து போராடினார். இதற்காக 21 வருடங்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றாலும், அவரது மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பதால் அதிபர் ஆகும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங்சாங் சூச்சி செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை, ஆங் சான் சூகியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது என அவரது அரசியல் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web