கள்ளக்காதலை கண்டித்ததால் சூனியம் வைத்த சித்தி.. ஆத்திரத்தில் கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டி தாலுகாவில் உள்ள கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா. அவரது அக்கா மகன் பீமப்பா. ஷோபாவுக்கு மாந்திரகத்தில் தீவிர நம்பிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கும் ஒரு இளைஞனுக்கும் தகாத உறவு இருந்தது. பீமப்பா இதைக் கண்டு ஷோபாவை கண்டித்தார். ஆனால் ஷோபா கேட்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்தன.
இந்த சூழ்நிலையில், சம்பவத்தன்று ஷோபா வீட்டில் தனியாக இருந்தபோது, பீமப்பா அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்ததால் கோபமடைந்த பீமப்பா, ஷோபாவின் தலையில் கல்லால் அடித்தார். ஷோபா பலத்த காயங்களுடன் இறந்தார். சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஜம்கண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஷோபாவின் உடலைக் கைப்பற்றி விசாரிக்க விரைந்து வந்த போலீசார்.
விசாரணையின் போது, ஷோபாவின் கள்ளக்காதலுக்கு பீமப்பா எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக, பீமப்பாவை பழிவாங்குவதற்காக ஷோபா சூனியம் செய்து அவரது வீட்டின் முன் வைத்தார். பீமப்பா எங்கும் வேலை கிடைக்காதபடி அவதூறு பரப்பினார். இதனால் கோபமடைந்த பீமப்பா, ஷோபாவைக் கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக பீமப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!