மதுபானத்தை ஷூவில் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரலாகும் வீடியோ பதிவு!!

 
மதுபானத்தை ஷூவில் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரலாகும் வீடியோ பதிவு!!


20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நேற்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. அதில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் களமிறங்கின

மதுபானத்தை ஷூவில் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரலாகும் வீடியோ பதிவு!!


முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.
173 ரன்களுக்கு வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்து கொண்டாடினர். மேத்யூ வேட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web