லாரி மீது ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை லாரி மீது ஆட்டோரிக்ஷா மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ராம்கர் மாவட்டத்தில் உள்ள மதுவதந்த் கிராமம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோரிக்ஷா வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் உட்பட 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, பலத்த காயமடைந்த மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள சர்தார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் சிகிச்சைக்காக தலைநகர் ராஞ்சியில் உள்ள உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னதாக, மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு இன்று (ஜனவரி 8) விடுமுறை அறிவித்திருந்த நிலையில், மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி விதிமீறி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி குழந்தைகள் உயிரிழந்தது, பள்ளியின் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை 23ஐ மறித்து போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!