தொண்டையில் கோழிக்கறி சிக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

 
மரணம்

தெலுங்கானா மாநிலத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர் மிகுந்த ஆசையுடன் அவசர அவசரமாகக் கோழிக்கறி சாப்பிட்டபோது, அந்தக் கறி அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேந்தர் (45). இவர் நேற்று முன்தினம் சிக்கன் வாங்கி கொடுத்து, தன் மனைவியைச் சமைக்கச் சொல்லிவிட்டு, அதிக பசியுடன் வந்து சாப்பிடத் தொடங்கினார். கோழிக்கறி என்பதால் அவர் மிகுந்த ஆசையுடன் அவசர அவசரமாகச் சாப்பிட்டபோது, ஒரு துண்டுக் கறி அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது.

பள்ளி மானவி தற்கொலை

சுரேந்தர் எவ்வளவோ முயற்சித்தும் உணவுக் குழாய் வழியாக அந்தக் கறி வயிற்றுக்குள் செல்லவில்லை; வெளியேவும் எடுக்க முடியவில்லை. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

க்ரில் சிக்கன்

இந்த விபரீத மரணம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதே மாவட்டத்தில் ஒருவர் முட்டை சாப்பிட்ட போதும் இதேபோலத் தொண்டையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கவலைக்கிடமான சம்பவங்கள் அவசர அவசரமாக உணவு உண்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!