சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா... செப்.2ல் தேரோட்டம்!

 
சாமித்தோப்பு
 

தமிழகத்தில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் இன்று காலை ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

சாமிதோப்பு

இன்று அதிகாலை அய்யாவிற்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சாமித்தோப்பு தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தலைப்பாகையும், காவி உடையும் தரித்தவாறு அய்யா... அரகர சிவசிவா... என்று பக்தி கோஷம் முழங்கினர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இனிமமும், அன்னதர்மமும் வழங்கப்பட்டது. 


8-ம் திருவிழாவில் வருகிற 30ம் தேதி அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலவேட்டையாடும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான செப்டம்பர் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web