உஷார்... மழைக்காலத்தில் இந்த வகை உணவுகளை தவிர்த்திடுங்க!
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய முதல் விஷயம் தெருக்களில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் உணவுகள். இந்த தின்பண்டங்கள் கவர்ச்சிகரமானவையாக இருந்தாலும் எப்போதும் ஆரோக்கியமானவை அல்ல. இந்த உணவுகள் தயாரிப்பில் சில விற்பனையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பருவமழை காலங்களில் மசாலாவகை உணவுகள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அத்துடன் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் நலமே. அதே போல் கடல் உணவுகளை விரும்பி உண்பவர்கள், மழைக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமே. ஜூசி இறால் மற்றும் கணவாய் மீன்களின் இனப்பெருக்க காலம். மழைக் காலங்களில் கடல் உணவுகளும் மாசுபடும். ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய் சாப்பிடலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் மழைக்காலத்தில் நன்றாக இருக்க உதவும்.
வழக்கமான தேநீருக்குப் பதிலாக மூலிகை தேநீர் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும். மழைக்காலத்தில் அதிகப்படியான சூப் வகை உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். மழைக்காலத்தில் கனமான உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பருவமழை நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் முடிந்தவரை தண்ணீர் குடிக்க வேண்டும். சமைக்காமல் பச்சையாக மற்றும் காரமான வகை உணவுகளை தவிர்க்கலாம்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!