கயத்தாறு அருகே அய்யனார் சிலை கண் திறப்பு விழா!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அய்யனார் சிலை கண் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு அய்யனார் சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்துள்ள அய்யனார் சிலையை செங்கோட்டை சேர்ந்த சிற்பி செல்வராஜ் தலைமையில் கண் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேத்துடன், சிறப்பு அபிஷேகங்களுடன் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!