47 வயதில் 'பாகுபலி' பட நடிகருக்கு திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து... காதலியைக் கரம் பிடித்தார்!

 
சுப்புராஜ்

’பாகுபலி’ படத்தில் அனுஷ்காவின் தாய்மாமாவாக நடித்திருந்தவர் சுப்புராஜ். ஆரம்ப காட்சிகளில் கோழையானவராகவும், அதன் பின்னர் பாகுபலியுடனான நட்பின் காரணமாக வீரனாகவும், கதையில் திருப்பம் ஏற்படுத்தும் விதமாக வீரத்துடன் போரிட்டு உயிரை இழப்பவராகவும் நடித்திருந்த சுப்புராஜ் நேற்று தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துக் கொண்டார்.

மணப்பெண் பெயர் ஷ்ரவந்தி என்றும், அவர் பல் மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. அவரது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யுடன் ’போக்கிரி’, அஜித்துடன் ’பில்லா’ உட்பட பல படங்களில் சுப்புராஜ் நடித்திருந்தாலும் ‘பாகுபலி’ படம் இவரை ரசிகர்களிடையே பரவலாகக் கொண்டு சென்றது.

ஆந்திராவைச் சேர்ந்த சுப்புராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ள நடிகர் சுப்புராஜுக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சுப்புராஜ்

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web