இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘பாகுபலி’ ராக்கெட் விண்ணில் பாய்கிறது!

 
ஸ்ரீஹரிகோட்டா
 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘எல்.வி.எம்.–எம்5’ எனப்படும் ‘பாகுபலி’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. 4,410 கிலோ எடையுடைய ‘ஜிசாட்–7 ஆர்’ அல்லது ‘சி.எம்.எஸ்–03’ எனப்படும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது கடற்படைக்கான தகவல் தொடர்பு சேவைகளுக்கு முக்கிய பங்காற்றவுள்ளது.

இந்நிலையில், ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்க்கும் பணிக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் காலத்தில் ராக்கெட்டின் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

24 மணி நேரக் கவுண்ட்டவுன் நிறைவடைந்தவுடன் இன்று மாலை ‘பாகுபலி’ ராக்கெட் விண்ணில் பாயும். இதன் மூலம் இந்தியாவின் கடற்படை தொடர்பு திறனை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய சாதனை நிகழவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!