வைரல் வீடியோ... ஓடும் காரில் கல்லூரி மாணவிக்கு பாபா பாலக்நாத் பாலியல் தொல்லை.. கொந்தளிக்கும் பக்தர்கள்!

 
பாபா பாலக்நாத்
 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் கல்லூரி மாணவியை பாபா பாலக்நாத் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், வைரலானதைத் தொடர்ந்து பக்தர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபல சாமியார் பாபா பாலக்நாத், ஓடும் காரில் ஒரு கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ ட்விட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ராஜஸ்தான் தக்"  எனும் ட்விட்டர் கணக்கின் மூலம் முதலில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ கடும் சர்ச்சைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் இருந்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஆன்மிகத் தலைவர்கள் தார்மீக விழுமியங்களை ஊக்குவிப்பார்கள், சுயஒழுக்கத்தோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களிடையே இந்த வீடியோ கடும் எதிர்வினையையும், அதிர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. 

வைரலான அந்த வீடியோவில் , பாபா பாலக்நாத், காருக்குள் மாணவியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துக் கொள்வது பதிவாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேடி தந்துல்ஜாவில் உள்ள க்ஷேத்ரபால் கோயிலில் பாபா பாலக்நாத்தை மாணவியைச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்திரம் மற்றும் மந்திரத்தின் மூலம் அவளது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று பாபா கூறியுள்ளார். இருப்பினும், உதவி செய்வதற்கு பதிலாக, அவர் மாணவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்.

இந்த வீடியோ பரவியதை அடுத்து, பாபா பாலக்நாத் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். மாணவி, தனது புகாரில் பால்க்நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியது, வழக்கை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. 

பாபா பாலக்நாத் போன்ற மதப் பிரமுகர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் சூழ்நிலை சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாபா பாலக்நாத் வைரலான வீடியோ மீது சமூக வலைதளங்களில் பக்தர்களின் சீற்றம் வெடித்தது

சமூக ஊடக பயனர்கள் தங்கள் கோபத்தையும் அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். சமூகத்தால் நம்பப்படும் மதத் தலைவர்கள் எப்படி இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த வீடியோவுக்கு ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்படிப்பட்டவர்களிடம் விட்டுச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும். புனிதமான ஆடைகளை அணிவதால் யாரையும் புனிதர் ஆக்க முடியாது. மற்றொருவர், "இவரைப் போன்ற கபடவாதிகள் சனாதன தர்மத்தை அழித்து விட்டார்கள். இவர் மீது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

பாபா பாலக்நாத்

ஆன்மிகத் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலரின் சுரண்டல் பிரச்சனையை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. பொதுமக்களின் பதில் மத பாசாங்குத்தனத்தின் விரக்தியை பிரதிபலிக்கிறது. “இந்த நயவஞ்சகர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் மத உணர்வுகளையும் சேதப்படுத்துகிறார்கள். அவர்கள் மிகக் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web