இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த குழந்தை.. மருத்துவமனை அலட்சியம்.. அடுத்து நடந்த சோகம்!
பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குடும்ப உறுப்பினர்கள் உடலில் அசைவுகள் இருப்பதை கவனித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.குழந்தையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கியாரா மீண்டும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை கியாரா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது.
முதலில் குழந்தை இறந்து விட்டதாக அறிவித்து தவறு செய்ததை மருத்துவமனை ஒப்புக்கொண்டது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!