பகீர்... பிரசவத்துக்கு அனுமதி மறுப்பு ... மருத்துவமனை படிக்கட்டிலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி!
ஆந்திர மாநிலத்தில் நந்தியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது செஞ்சி குடே பகுதி. இந்தப் பகுதியில் வசித்து வரும் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு செப்டம்பர் 21ம் தேதி பிரசவ வலி வந்தது. உடனடியாக உறவினர்கள் கொத்த பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து சென்றனர். அங்கிருந்த அரசு ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் கதறித்துடித்தார்.
உறவினர்கள் மருத்துவர்களிடம் மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ள கெஞ்சி கேட்டனர். அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். இந்நிலையில் உறவினர்கள் வேறுமருத்துவமனைக்கு செல்ல கர்ப்பிணியை படிக்கட்டில் அழைத்து செல்ல தயாராகினர். அப்போது மருத்துவமனை படிக்கட்டிலேயே அப்பெண்ணுக்கு பிரவசத்தில் குழந்தை பிறந்துவிட்டது. இதனை பெண்ணின் உறவினர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் பின்னர் கர்ப்பிணி பெண்ணையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் குழந்தை பிறந்த பெண்ணின் வீட்டிற்கு 3 நாட்களுக்குப் பின் சென்றனர். அவர்களை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!