ஃபிரிட்ஜில் துர்நாற்றமா? சுலபமா நீக்கும் எளிய முறைகள்!
பெரும்பாலான வீடுகளில் ஃபிரிட்ஜில் மீந்த உணவுகள், சமைக்காத இறைச்சி போன்றவை வைத்து வைக்கும் போது கெட்ட வாசனைப் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு சிறந்த முறையாக காபி கொட்டை பயன்படுத்தலாம். சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் அளவு காபி கொட்டையை வைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். வாரத்தில் ஒருமுறை புதிதாக மாற்றினால் வாசனை மறைந்து, ஈரப்பதத்தையும் கொஞ்சம் உறிஞ்சும்.

மேலும் பேக்கிங் சோடா கெட்ட வாசனையை உறிஞ்சும் தன்மை கொண்டது. மூடியில்லாத டப்பாவில் வைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் புதிதாக மாற்றவும் வேண்டும். சமைக்காத இறைச்சியால் ஏற்படும் வாசனையை நீக்க விரும்பினால், வினிகர் கலந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரிட்ஜை முழுமையாக துடைக்கலாம். இதனால் அனைத்து துர்நாற்றங்களும் போகும்.
![]()
எலுமிச்சை பழம், லெமன் ஜூஸ் மற்றும் வெனிலா எசன்ஸ் போன்ற இயற்கை பொருட்களையும் பயன்படுத்தி வாசனையை நீக்கலாம். வெட்டிய எலுமிச்சையில் உள்பகுதியில் சில கிராம்புகளை வைத்து ஃப்ரீசர் மற்றும் ஃபிரிட்ஜ் டோர் பகுதிகளில் வைக்கவும். வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்த்த துணியை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு நாள் முழுவதும் வைக்கும்போது, கெட்ட வாசனைகள் முழுமையாக நீங்கி புதிய வாசனை வீசும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
