பகீர்... நள்ளிரவில் நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து.. 8 பேர் காயம்!

 
ஆம்னி பேருந்து தீ விபத்து

நள்ளிரவு நேரத்தில், நடுரோட்டில் திடீரென சொகுசு பேருந்து ஒன்று தீப்பற்றி எரிய துவங்கியது. சமயோசிதமாக பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு, பயணிகளை அலறியடித்தப்படி எச்சரிக்கை செய்து எழுப்பி, கீழிறங்க செய்து காப்பாற்றியுள்ளார்.

நேற்று கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்த  பேருந்து பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த புது சாம்பள்ளி பகுதியைக் கடந்த போது, திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியாகி, தீப்பிடித்து எரிய துவங்கியது. 

Mettur

உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், தீயைக் கண்டதும், சாலையிலேயே பேருந்தை நிறுத்தி விட்டு, பயணிகளை உடனடியாக வெளியேறும் படி எச்சரித்து, கீழிறங்க செய்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க தொடங்கினர். அப்போது பேருந்து முழுவதும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு நடுரோட்டில் பேருந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேருந்தும் முழுவதும் எரிந்து எலும்பு கூடாய் காட்சி அளித்தது. மேலும் இந்த தீ விபத்தில் 5 ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் 8 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Mettur

காயம் அடைந்த அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இந்த விபத்து குறித்து கருமலை கூடல் போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web