இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது... மாயாவதி திடீர் அறிவிப்பு!
இந்தியாவில் மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், மற்ற சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தல் ஆணையம் போலி வாக்குகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என ப அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல வரவில்லை என்பதால் இப்படியான குற்றச்சாட்டை மாயாவதி முன் வைத்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் கூறியுள்ளார். நேற்று நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முடிவுகள் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது எனக் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் பற்றி விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன.
இது ஜனநாயகத்தின் கவலை மற்றும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்நிலையில் தேர்தல் ஆணையம் போலி வாக்களிப்பைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, நாங்கள் இடைத்தேர்தல் எதிலும் போட்டியிட மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். அதே போல, லோக்சபா தேர்தல், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போட்டியிடும் எனவும் மாயாவதி கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!