லிஃப்டில் வெடித்து சிதறிய பலூன்கள் … சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு!

 
லிப்ட்

மும்பையில் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்டில் பலூன்கள் கொத்தாக வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலூன்களுடன் ஒருவர் லிஃப்டுக்குள் நுழைந்த சில வினாடிகளில் திடீரென தீப்பிழம்புகளுடன் வெடிப்பு ஏற்பட்டது. இந்த முழு சம்பவமும் லிஃப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காட்சிகளில், ஒரு பெண் தள்ளுவண்டியுடன் லிஃப்டுக்குள் நுழைவதும், பின்னர் ஒரு ஆண் பெரிய பாலிதீன் பையில் நிறைய பலூன்களை எடுத்துச் செல்வதும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, பலூன்கள் திடீரென தீப்பிடித்து லிஃப்டின் உள்ளே வெடித்து சிதறின. தீப்பிழம்புகள் சில வினாடிகள் கேமராவை முழுவதும் மூடியது.

வெடிப்புக்கு பிறகு, அந்த பெண்ணும் இரண்டு ஆண்களும் லிஃப்டிலிருந்து அவசரமாக வெளியே ஓடி வருவது காட்சிகளில் பதிவாகியுள்ளது. லிஃப்டின் மையப்பகுதியில் தீப்பிழம்புகள் எழுந்ததால் கதவுகள் மூடப்படுவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!