6 வது நாளாக குற்றாலத்தில் குளிக்கத் தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள் அனைத்தும் அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவி பகுதியில் நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு ஆண் யானையின் சடலம் அருவிக்கரையில் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்துள்ளது.
இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு, சேதங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஐந்தருவி மற்றும் புலி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!