குற்றால அருவியில் குளிக்க தடை...பயணிகள் ஏமாற்றம்!

 
செம ஜாலி!! இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! குவியும் சுற்றுலா பயணிகள்!!


புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்து வருகின்றனர். புகழ்பெற்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

குற்றால அருவி

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  

இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருவிக்கரையில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குற்றால அருவி

சபரிமலை சென்று திரும்பி வந்த பக்தர்கள் குற்றாலம் வந்து குளித்து விட்டு செல்வதுண்டு. குளிக்க விதிக்கப்பட்ட தடையால் விடுமுறை தினத்தில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர் எனினும் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி போன்ற இடங்களில் குளிக்க தடை இல்லை என்பதால் அங்கு சென்று பலர் நீராடினர்.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web