பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் முகமூடி, விசில் பயன்படுத்த தடை... போலீசார் அதிரடி!
இந்நிலையில் பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பி தயானந்தா, "2024ம் ஆண்டின் கடைசி செய்தியாளர் சந்திப்பு" என்று குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களின் அடிப்படையில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க 11,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு சந்திப்பு என, மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளை கண்டறிந்துள்ளோம். அதன்படி, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.பிறரை குறிப்பா பெண்களையும், சிறு குழந்தைகளை பயமுறுத்தலாம் அல்லது அதிர்ச்சியடையச் செய்யலாம் என்பதால், கொண்டாட்டங்களின் போது சிதைக்கப்பட்ட அல்லது ஆபாசமான முகமூடிகளை அணிய வேண்டாம் என்று காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று கூறினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், கொண்டாட்டத்தின் போது எந்தவிதமான விசில்களையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில், பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் பெங்களூரு போலீசார் வெற்றி பெற்றுள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய நடவடிக்கையின் போது ரூ.2.5 கோடிக்கும் அதிகமான போதைப் பொருள்களை பறிமுதல் செய்ய முடிந்தது. மொத்தம், 3.5 கிலோ ஹைட்ரோ கங்கா, 16 கிலோ கஞ்சா, 40 யூனிட் எல்எஸ்டி கீற்றுகள், 130 கிராம் சரஸ் மற்றும் 2.3 கிலோ எம்டிஎம்ஏ படிகங்களை போலீசார் கைப்பற்றினர்” என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!