ஊழல் வழக்கில் கைதான வங்கதேச மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை!

 
கலிதா ஜியா

 
வங்கதேச நாட்டில் ஊழல் வழக்கில்  மாஜி பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் கலிதா ஜியா. இவருக்கு வயது 79. இவரது ஆட்சி காலத்தில் அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் செயல்பட்டு வரும்  அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கலிதா ஜியா

இது குறித்து  நடத்தப்பட்ட  விசாரணையில் கலிதா ஜியா, தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிக பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.  இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உட்பட  6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக்க உத்தரவு பிறப்பித்தது.

கலிதா ஜியா

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  கலிதா ஜியா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக கூறி  உச்சநீதிமன்றம் கலிதா ஜியா உட்பட   6 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web