சூப்பர்... இனி ரேஷன் கடைகளில் வங்கிச் சேவைகள்!

 
ரேஷன்

 தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவு  வங்கி சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து   கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன்  என  பலவகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 ரேஷன்
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும்  ரேஷன் கடைகளில்  குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு  கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட  வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்தான கையேடுகள் விநியோகம் செய்யவும், ரேஷன்கடை  பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கடை  பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் தொடங்கப்படும்   சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, தொடங்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

ரேஷன்


 அதே நேரத்தில் அவர்களுக்கு  வங்கி வசதிகளை எளிமையாக பயன்படுத்திக் கொள்ள ஏ.டி.எம். கார்டு வசதியினைத் தொடங்கவும்  அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்யவும் வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ளவர்களின்  சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்களில் அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய வங்கி திட்டங்களை வகுத்து, இளைஞர்களை கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்கப்படுவர்  அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கி சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கவும்  இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.    

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!